(UTV | கொழும்பு) –
தொழிலாளர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7 வாகனங்களும் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார். உரிய அனுமதி வழங்கப்பட்ட ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் இலங்கைக்குள் 119 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 75 வாகனங்கள் அதே நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 35 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, குறைந்த மதிப்பீடு, அந்நியப்படுத்தல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரி செலுத்துதல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பணத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்ற உண்மைகளின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්