உள்நாடு

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு)

  நோர்வூட் பேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் நியூவெளி கம பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த தொழிலாளர்களுக்கு 3 மாத கால சம்பள நிலுவை பணத்தையும் ஒரு வருடத்திற்கான போனஸ் பணத்தையும் வழங்குமாறு கோரி இன்று  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது ஆடை தொழிற்சாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தாம் வேலை செய்த 3 மாத கால சம்பளத்தையும் ஒரு வருடத்திற்கான போனஸ் பணத்தினையும் குறித்த ஆடை தொழிற்சாலையின் அதிகாரிகள் தங்களுக்கு வழங்காது ஆட தொழிற்சாலையையும் மூடி விட்டு சென்று விட்டார்கள் தமக்கான வேதனை பணத்தை வழங்காது நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் வேறு ஒரு ஆடை தொழிற்சாலைக்கு தொழிலுக்கு செல்ல வேண்டுமானால் இதுவரை காலம் தாம் பணி புரிந்த ஆடை தொழிற்சாலையிலிருந்து ஊழியர் சேமலாப பத்திரத்தை வைத்துக் கொண்டு வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர் குறித்த அட்டையினை தங்களுக்கு தருமாறு கூறினால் குறித்த அட்டை காணாமல் போய் விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர் இதேவேளை நோர்வூட் நியூவெளி கம ஆடை தொழிற்சாலை 3 மாத காலமாக மூடப்பட்டு கிடப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேண்டும் வேண்டும் 3 மாத சம்பளம் வேண்டும், போனஸ் வேண்டும், நிலுவை தொகை 18,000 ரூபா வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்முறை வருகின்ற தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுடைய குழந்தைகளுக்கு பால்மா பக்கட்டுகளையும் தமக்குள்ள அத்தியாவசிய பொருட்களையும் பெற்றுக்கொள்ள பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

எமது பிரச்சினை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கான நிலுவை தொகை எங்களுடைய சம்பள பணம் போனஸ் ஆகியவற்றையும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா