(UTV | கொழும்பு) –
ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நியாயமான விசாரணை இன்றி கட்சி உறுப்புரிமையை இரத்து செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம், சட்டத்திற்கு முரணானது என அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நீதியரசர்களான விஜித மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්