உலகம்

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

(UTV | கொழும்பு) –

தவறுதலாக எகிப்து இராணுவ எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், காசாவையொட்டியுள்ள எகிப்து எல்லையில் இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக எகிப்து இராணுவ எல்லைப்பகுதியை நோக்கி சுட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது உத்தியோகபூர்வ சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், சில மணிநேரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக கேரேம் ஷலோம் எல்லையையொட்டிய எகிப்து இராணுவ எல்லைப் பகுதியை நோக்கி தாக்கியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது என குறிப்பிட்டுள்ளது.

கேரேம் ஷலோம் என்பது காசாவையொட்டிய இஸ்ரேல் – எகிப்து எல்லைப் பகுதியாகும். தெற்கு இஸ்ரேல் படையினர் இங்கு காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலஸ்தீன ஆதரவு பெற்ற காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போர் இன்றுடன் 16 வது நாளாக தொடர்கின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

தோல்வியடைந்தால் நாட்டை விட்டும் ஓடத் தயார்

காசாவில், 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளனர் : ஐ.நா தகவல்