உள்நாடு

தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

 

தென் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அவசர நிலை காரணமாக தென் மாகாண கல்விச் செயலாளரின் அனுமதிக்கு உட்பட்டு தெனியாய கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டதாக தெனியா பிராந்திய கல்விப் பணிப்பாளர் தம்மிகா பிரியதர்ஷனி தெரிவித்தா. இதேவேளை, கடும் மழை காரணமாக மாத்தறை – கொட்டபால வீதியில் கிரிலிப்பன பகுதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிலிப்பன பிரதேசத்தில் இருந்து மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளதாகவும், சிறிய வாகனம் கூட அப்பகுதி வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் “அத தெரண” செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொரவக – நெலுவ வீதியும் மொரவக நகரத்திலிருந்து தடைப்பட்டுள்ளதுடன், கிரம ஓயா நிரம்பி வழிவதால் பிடபெத்தர பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிர்காக்கும் ‘சக்தி’ இலங்கையினை நோக்கி வருகிறது

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!