(UTV | கொழும்பு) –
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் (வெளிநாட்டுப் பணம்) 2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு (2023) 75 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு என்ற ரீதியில் இந்த அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் எனவும், நாட்டின் மீதான அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் இதனை கூறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னர் வெளிநாடுகளில் வாழும் மக்கள் வெளிநாட்டுப் பணத்தை அனுப்பாமல் தமது குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வர முயற்சித்ததாகவும், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகத் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්