உள்நாடு

பலஸ்தீன் மக்களுக்கு எதிரான பயங்கரவாத போரை கண்டித்து மூதூரில் போராட்டம்!

(UTV | கொழும்பு) –

 

பலஸ்தீனில் இடம் பெறும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மூதூரில் இன்று ஜூம் ஆ தொழுகையின் பின் அமைதி வழி போராட்டமொன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம் பெற்றது.
பயங்கரவாத தாக்குதலை நிறுத்தக்கோரியும் சிறுவர்கள் கொல்லப்பட்டமை பல தாக்குதல்களை நடாத்துவதை நிறுத்த கோரியும் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. பலஸ்தீனில் பல உயிர்களை பயங்டரவாத தாக்குதல் மூலமாக பழி கொண்டார்கள் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பலஸ்தீனிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சிறுவர்களை கொல்லப்படுவதை நிறுத்து,பயங்கரவாதத்தை ஒழி போன்ற வாசகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜூம் ஆ தொழுகையின் பின் இடம் பெற்ற குறித்த அமைதிவழி போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் அநேகமான பள்ளிவாயல்களில் விசேட ஜனாசா தொழுகையும் இடம் பெற்றதுடன் துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.

செய்தி = Hasfar A Haleem

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

இலங்கை விமானப்படையின் 69 வருட ஆண்டு நிறைவு விழா இன்று

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்