உள்நாடு

மரத்துடன் மோதிய தனியார் பஸ் – 15 பேர் காயம்.

(UTV | கொழும்பு) –

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைத்தவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பொலிஸாருடன் இணைந்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இணைந்து செயற்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் இரு பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் ஜனவரி முதல் மற்றுமொரு வரி அதிகரிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை வெளியீடு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு