உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் மக்களுக்காக நோன்பு நோற்குமாறும், தொழுகைகளில் குனூத்-அந்-நாஸி லாவை ஓதுமாறு ACJU கோரிக்கை

(UTV | கொழும்பு) –

கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக.

இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும்.

வியாழன் மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

அவ்வகையில் பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் வியாழக்கிழமை மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்று துஆக்களில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் முஸ்லிம்களை வேண்டிக்கொள்கிறது.

அத்துடன் இதற்காக அனைத்து மஸ்ஜித்களிலும் ஐவேளைத் தொழுகைகளில் குனூத்-அந்-நாஸி லாவை ஓதிவருமாறு ஏலவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் வெளியாகின

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

நாளை 18 மணிநேர நீர்வெட்டு