உள்நாடு

மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

(UTV | கொழும்பு) –

 

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப மஹாபொல உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரிபோஷாவை வீட்டிற்கு சென்று வழங்க நடவடிக்கை

ஜீவன் தொண்டமான் இங்கிலாந்து அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

ஈரான் தூதுரகத்திற்குச் சென்று கையெழுத்திட்ட மஹிந்த, ஹக்கீம்!