(UTV | கொழும்பு) –
ஈரானில் மழலையர் பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலையில் வெளிநாட்டு மொழிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு தெரிவிக்கையில், ‘மழலையர் பாடசாலைகள், நர்சரி பாடசாலைகள், தொடக்க பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் இந்த வயதில் குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது’ என தெரிவித்துள்ளது. ஏற்கனவே ,2018 ஆம் ஆண்டு தொடக்க பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது.ஆனாலும் ஆங்கிலம் நடுநிலை பாடசாலையில் இருந்து கற்பிக்கப்படுகின்றது.
கடந்த மாதம், மாணவர்கள் சர்வதேச பாடசாலைகளில் இணைவதற்கு அரசாங்கம் தடை விதித்தது.ஈரானிய குழந்தைகள் நாட்டின் பாடசாலை பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්