உள்நாடு

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

(UTV | கொழும்பு) –

காசா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் 2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் தூண்டுதல்கள் இருந்தால் கூட மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என சுமந்திரன்தெரிவித்துள்ளார். முன்னர் இடம்பெற்ற சம்பவம் மீண்டும் நிகழ்கின்றது என்ற உணர்வை தவிர்க்க முடியாமல் உள்ளது – 2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான இராணுவத்தின் தாக்குதலிற்கும் இதே நொண்டிச்சாக்கை சொன்னார்கள் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கைக்கு

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு