உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் – பிணவறைகளாக மாறி வரும் ஐஸ்கிரீம் வண்டிகள்.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

பலஸ்தீனத்தில் போரினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் அடக்கம் செய்ய முடியாத நிலைமையொன்று அங்கு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகள் மீதும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உயிரிழந்தவர்களின் உடல்கள், ஐஸ்கிரீம் வண்டிகளில் பாதுகாக்கப்படுகின்றது.

காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலினால் இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்ச கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.இதனால் அங்குள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நிரம்பி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ,மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பியுள்ளதால் ஐஸ்கிரீம் வண்டிகளை தாம் பிணவறைகளாக மாற்றி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

மீண்டும் ஊரடங்கு : வலுக்கும் எதிர்ப்புகள்