(UTV | கொழும்பு) –
இலங்கையில் உள்ள மிகவும் சிரேஷ்ட அநாதை இல்லங்களில் ஒன்றான மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம், தனது 61ஆவது வருடப் பூர்த்தியை இன்று சனிக்கிழமை (14) கொண்டாடியது.
இலங்கையின் முஸ்லிம் அநாதை சிறுவர்களுக்கு அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த உருவாக்கப்பட்ட மிகப் பெரும் சொத்தாகக் கருதப்படும் இந்த இல்லம், 1962ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி, கம்பஹா மாவட்டம், பியகம தேர்தல் தொகுதியில் மாகொலவில் உருவாக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 61 வருடங்களாக இலங்கை முஸ்லிம் அநாதை சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் மிகப் பெரும் அர்ப்பணிப்புக்களை செய்துள்ள மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம், தனது 62ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்ல பழைய மாணவர் சங்கம், இதன் 61ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை சிறப்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தின் மள்வானை கிளையில் இந்த சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது.
இதுவரை, சுமார் 3,000 இற்கும் அதிகமான அநாதை சிறுவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ள இந்த இல்லம், தந்தையை இழந்த ஆண் மாணவர்களுக்கு மேலதிகமாக, தெரிவு செய்யப்பட்ட அநாதை சிறுமியரை அவர்களது வீட்டில் வைத்தே பராமரிக்கத் தேவையான நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றது.
மேலும், மாகோல முஸ்லிம் அநாதை நிலையம் புதிய பிள்ளைகளை உள்வாங்கும் நாடலாவிய வேளைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. அநாதை சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுமார் 35000 தொடக்கம் 40000க்கு உட்பட்ட அநாதைகள் நாட்டில் உள்ள நிலையில் சுமார் குறிப்பிட்ட 5000 -7000 வரையான பிள்ளைகள் மாத்திரமே ஏதோ ஒரு வகையில் உதவிகளை பெற்று வாழ்கின்றனர்.
ஆகவே இவைகளை கருத்திற்கொண்டு சகலதையும் இலவசமாக வழங்கும் மாகோல முஸ்லிம் அநாதை நிலையத்தில் உங்களது பிள்ளைகள், உங்களது ஊர்களில் உள்ள பிள்ளைகளை சேர்த்து சமூகத்தின் தூண்களாக அவர்களும் வளர்ந்து வர முயற்சி செய்வோம் என மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் எஸ்.ஏ.சி.எம். முனவ்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්