உள்நாடு

2 வயது சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

கொக்காவெவ, துடுவெவ பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை கிணற்றில் விழுந்த தாய் மற்றும் சிறுமி ஒருவர், கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்கவெவ பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்திருந்த நிலையில் காணப்பட்டார் எனவும், சிறுமியின் தாய் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது 5 மாதங்களான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துடுவெவ பிரதேசத்தில் உள்ள விவசாய கிணற்றில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மிதப்பதாகவும், 31 வயதான அவரது தாயார் கிணற்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இருவரையும் கரைக்கு எடுத்து வந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி உயிரிழந்த விதம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும் – இம்ரான் எம்.பி

editor

இராஜகிரியவில் காருக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்!

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு