(UTV | கொழும்பு) –
பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும்.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්