உள்நாடுசூடான செய்திகள் 1

வடக்கு – கிழக்கில் பூரண கதவடைப்பு- ஒன்றுசேரும் தமிழ் முஸ்லிம் கட்சிகள்

(UTV | கொழும்பு) –

வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16.10.2023) மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வசந், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் நேசன்,ரெலோ கட்சி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீர், புளொட் சார்பாக ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார நெருக்கடி -நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்குவதில் சிக்கல்

தபால் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்