(UTV | கொழும்பு) –
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை இன்று கோரியுள்ளது. விண்ணப்ப அறிவிப்பு மற்றும் அது தொடர்பான விண்ணப்பம் பாராளுமன்ற இணையதளம் மூலமாகவும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அண்மையில் தீர்மானித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது பல மாதங்களாக தாமதமானது. அந்த சட்டத்தில் உள்ள குறைபாட்டை சரி செய்யும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්