(UTV | கொழும்பு) –
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை, பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் சில அரசியல்வாதிகள் மற்றும் மூத்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துவது முக்கியம் என்று இந்தப் பிரேரணையில் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேஜர் பிரதீப் உடுகொட, வஜிர அபேவர்தன, குணதிலக்க ராஜபக்ஷ சஞ்சீவ எதிரிமான்ன, டி.வீரசிங்க, சுமித் உடுகும்புர, ஜயந்த கடகொட, ஜகத் சமரவிக்ரம, கருணாதாச கொடிதுவுக்கு, சட்டத்தரணி மதுர விதானகே, சமன்பிரிய ஹேரத், , ஜகத்குமார சுமிதிரா ஆராச்சி, டீ.பீ ஹேரத், கோகிலா ஹர்ஷனி, குணவர்தன உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, உதயகாந்த குணத்திலக்க,எச். நந்தசேன, நாலக கோட்டேகொட, குமாரசிறி ரத்நாயக்க மற்றும் சிபி ரத்நாயக்க ஆகியோரே கையொப்பமிட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්