உள்நாடு

வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிரிபத்கொட ஆதார வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை, எஹலியகொட ஆதார வைத்தியசாலை, பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலை மற்றும் இரண்டு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் எக்ஸ்ரே பரிசோதனைப் பிரிவு மூன்று வாரங்களாக செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை- மஹிந்த