(UTV | கொழும்பு) –
நாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கோரிய மாற்றத்தின் ஆரம்பமாக ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கட்சி சம்மேளனம் எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற இருக்கிறது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த சம்மேளனத்தில் கட்சிக்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
அத்துடன் நாடு செல்லும் போக்கை மாற்ற வேண்டும் என மக்கள் போராட்டத்தின் போது தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தது. நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கே இதனை தெரிவித்திருந்தது.
அந்த மாற்றத்தை செய்ய வேண்டி இருப்பது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியாகும். என்றாலும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கிறது. அதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப 2048ஆம் போது நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லும்போது அதற்கு பாெருத்தமான வகையிலேயே கட்சிக்கு புதிய யாப்பு ஒன்றையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அத்துடன் வறுமையற்ற நாடாக மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான வேலைத்திட்டகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්