உள்நாடு

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பெண்கள்!

(UTV | கொழும்பு) –

ஜோர்தானில் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசித்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் இலங்கையர்கள் என்று கூறப்படும் 2 பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். 50 வயதான ஜே.ஏ. ஷமிலா துஷாரி மற்றும் 44 வயதான கே.ஏ. ஸ்ரீயானி மஞ்சுளா குலதுங்க எனப்படும் பெண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த 2 பெண்களையும் ஜோர்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமூக வலைத்தள பதிவேற்றம் குறித்து கண்காணிப்பு

சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO]

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்