(UTV | கொழும்பு) –
காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இராணுவம் நிறுத்திவிட்டதன் காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්