வகைப்படுத்தப்படாத

இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள்:குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – இரட்டைக் குடியுரிமை கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தருமாறு உள்நாட்டு விவகார வடமேல் அபிவிருத்தி அமைச்சர் எஸ் பி நாவின்ன உத்தரவிட்டுள்ளார்.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 20 முதல் 25 வருட ஆவணங்களை தாம் கோரியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரத்தில் இது தொடர்பான கோரிக்கையை குடிவரவுத்திணைக்களத்திடம் விடுத்திருந்த நிலையிலேயே அமைச்சரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த தரப்பின் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச்செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் அதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த இரட்டைக் குடியுரிமை விடயம் அதிகமாக பேசப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது

இன்று உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினம்