(UTV | கொழும்பு) –
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக அத்துரலியே ரதன தேரர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கி ஜனக் டி சில்வா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் இணக்கப்பாட்டுடன், நீதியரசர் புவனேக அலுவிஹாரே இதனை அறிவித்துள்ளார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் ஒழுக்காற்று குழு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதம் மூலம் மனுதாரர் வணக்கத்திற்குரிய அதுரலியே இரத்தின தேரரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அத்துரலியே ரதன தேரர், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், உயர் நீதிமன்றம், கட்சியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්