(UTV | கொழும்பு) –
இஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களினால் விமான நிலையங்களின் ஓடுபாதை அழிக்கப்பட்டுள்ளதோடு, விமான நிலையங்களின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் வெளிவிவகார அமைச்சர் டமாஸ்கஸ் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්