உள்நாடு

கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது – ஹாசு மாரசிங்க.

(UTV | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் 850 – 900 பில்லியன் வருமானம் நாட்டுக்கு இல்லாமல் போனது.

இதனால்தான் டொலர் தட்டுப்பாடுக்கு நாம் முகம் கொடுத்தோம். நாட்டுக்குத் தேவையான நிதியை பெறுவதற்காக மத்திய வங்கி பணத்தை அச்சிட்டதை அடுத்துதான் பொருளதார சிக்கல் ஏற்பட்டது.
தனக்கு நெருக்கமான பெரு வியாபாரிகளுக்கு சலுகை வழக்கும் வகையில்தான் முன்னாள் ஜனாதிபதி 900 பில்லியன் ரூபாய் வரி வருமானத்தை இல்லாமல் செய்தார். இதனால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு தான் நாம் இப்போதுவரை முகம் கொடுத்து வருகிறோம்.

இதிலிருந்து மீள்வதற்காக இன்னமும் சிறிய காலம் மக்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டியேற்படும். ஆனால், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மக்களுக்குத் தேவையான உரிய நிவாரணங்களை வழங்குவார் என நாம் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை இலங்கை வந்தடைந்தது

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்