வகைப்படுத்தப்படாத

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

(UTV | கொழும்பு) –

இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நில்வலா ஆற்றுப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அக்குரஸ்ஸ, மாலிம்பட, திஹகொட, மாத்தறை மற்றும் கம்புருப்பிட்டிய ஆகிய ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், கிங் கங்கையில் வெள்ளம் குறைந்துள்ள போதிலும், சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்க வீதிகளில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அலோசியஸ் மற்றும் கசுன் நீதிமன்ற முன்னிலையில்

கியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

பிரபல சின்னத்திரை நடிகை ரகசிய திருமணம்!!