உலகம்

காசா தாக்குதலில் – 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 மாணவர்கள் உயிரிழப்பு.

(UTV | கொழும்பு) –

ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 ஐ.நா பாடசாலை மாணவர்கள் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமை சேர்ந்த 11 ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் நடத்தப்படும் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. பாடசாலை மாணவர்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 5 ஆசிரியர்கள், 1 மகப்பேறு மருத்துவர், 1 பொறியாளர், 1 ஆலோசகர் மற்றும் 3 உதவியாளர்கள் என்று துணை இயக்குநர் ஜெனிபர் ஆஸ்டின் ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளார். காசாவில் 2,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் வலுக்கிறது

வர்த்தக நாமத்தை ‘Meta’ என மாற்றியமைத்தது ‘Facebook’ நிறுவனம்

ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது!