உலகம்உள்நாடு

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

(UTV | கொழும்பு) –

காசாவை விட்டு  263,000க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான  அலுவலகம் (OCHA) அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை  பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் பயங்கரமான தாக்குதல்களை  மேற்கொண்டிருந்தனர். இத்தாக்குதல்களினால்  1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது.

இதனையடுத்து  காஸா பகுதியைக்  குறிவைத்து இஸ்ரேல்  தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதோடு இத்தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவிப்  பொதுமக்கள் கொல்லப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஸாவை விட்டு  263,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா நேற்று தெரிவித்துள்ளது. அத்துடன் இவ் எண்ணிக்கையானது “மேலும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய உரச் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

பசில்- ரணில் மீண்டும் சந்திப்பு: மாலை முக்கிய பேச்சு

புத்தாண்டிற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – விஜயதாச