உள்நாடு

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபபொலிஸ் பரிசோதகர் சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து, அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரியை பொலிஸாரின் மரியாதையுடன் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 298,162 பேர் பூரண குணம்

 தேர்தல் அச்சுப்பணி முற்றாக நிறுத்தம்

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது