உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அனுதாபச் செய்தி!

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும்,பிரதிச் செயலாளரும்,வட மாகாண ஒருங்கிணைப்பாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களின் தந்தையார் திரு.வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமரர் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (இளைப்பாறிய பிரதம கணக்காளர், இலங்கை புகையிரதத் திணைக்களம்) அவர்களை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி எனது பிறந்த தினத்தன்று,அவரது மட்டுவில் இல்லத்தில் சந்தித்திருந்தேன்.அறிவார்ந்த 87 வயதுடைய சிரேஷ்ட பிரஜை ஒருவரை தென்மராட்சி மண் இழந்திருப்பதை எண்ணி வருந்துகிறேன்.

பல்வேறுபட்ட சமூக சேவைகளினூடாக சிறந்த சமூக ஆளுமையாக திகழ்ந்து தென்மராட்சி பிரதேச சமூக மாற்றத்திற்கு முற்போக்கான பங்களிப்பை நல்கிய ஒருவராவார்.சமுதாய வளர்ச்சியில் பெரும்துணையாக இருந்த அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தென்மராட்சி மக்கள் என்றும் அவரை நினைவு கூர்வர் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை வாழக்கையை புரிந்து கொள்வது போன்று நம் வாழ்வின் முடிவினையும் புரிந்து கொள்ள வேண்டும்.

“நாம் மறைந்தாலும் நமது நற்செயல்கள் உலகை விட்டு மறைவதில்லை” என்ற உண்மையை எண்ணி மனதினை உறுதிப்படுத்திக்கொள்வோம். அன்னாரின் மறைவால் துயரத்தால் வாடும் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபஙங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைவு

அரசு முஸ்லிம் அரசியல்வாதிகளை வேட்டையாடுகிறது [VIDEO]

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது