உள்நாடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கான வதிவிட பயிற்சி!

(UTV | கொழும்பு) –

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண உத்தியோத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி வளர்ப்பது சம்பந்தமான மூன்று நாள் வதிவிட பயிற்சிநெறி கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சரத் சந்திரபால தலைமமையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய கல்வி பயிற்சி நிலையத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுல சமல் பெரேரா அவர்களும், விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி பிரதிப் பணிப்பாளர் விறாஜ் கபில, நிருவாக பிரிவு உதவிப் பணிப்பாளர் நிர்மலி, கிழக்கு மாகாண கணக்காளர் சஜித் குனசேகர, நிர்வாக உத்தியோகத்தர் பி.தியாகராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கலாராணி ஜெயசுதாசன் மற்றும் உயர் தொழிநுட்ப கல்லூரி பணிப்பாளர்ஜெயபாலன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மேலும் வளத்திறன் மிக்க நிலைத்து நிற்கக் கூடிய சமுதாயத்தில் அபிவிருத்தியுடன் வாழ்வதற்கு தேவையான அறிவு திறன் விழுமியம் மற்றும் மனப்பான்மை அனுகுமுறைகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. இம் மூன்று நாள் வதிவிட பயிற்சி நெறியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

   

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

ஹபரனை விவகாரம் : விசாரணை குழு நியமனம்