உள்நாடு

புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு!

(UTV | கொழும்பு) –

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டபிள்யூ. ஜகத் குமார ஆளும் கட்சியின் பிரதம அமைப்புச் செயலாளராக நேற்று தனது கடமைகளை ஆரம்பித்தார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவப் பட்டதாரி மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டதாரி ஆவார். களனிப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரியான எம்.டபிள்யூ. ஜகத் குமார, இதற்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வீடமைப்பு அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

எம்.டபிள்யூ. ஜகத் குமார இந்தப் பதவியை ஏற்பதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகத்தில் உதவிச் செயலாளராகவும், பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பில் இணைந்துள்ள முகாமைத்துவ சேவை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

அரச சேவையில் 25 வருட அனுபவமுள்ள எம்.டபிள்யூ. ஜகத் குமார அவர்கள் தற்போது ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தில் பாராளுமன்ற விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றுகின்றார். இந்நிகழ்வில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தீர்மானமின்றி நிறைவடைந்த செயற்குழுக் கூட்டம்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!