உலகம்

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.

(UTV | கொழும்பு) –

காசாவில்இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி பாதை குறித்து அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆராய்ந்துவருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்தும் காசாமீது தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா அங்கு சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.

அமைப்புகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 4600 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. காசாவிலிருந்து சுமார் 260.000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளன. 2014 இல் 50 நாள் மோதல்களி;ன் பின்னர் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்கள் இடம்பெயர்ந்தது இதுவே முதல்தடவை என ஐநா தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். குண்டுவீச்சில் 1000த்திற்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான்வெளி தாக்குதல்

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.