(UTV | கொழும்பு) – முக்கிய அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் தமது கோரிக்கையை முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து பொதுஜன பெரமுன கட்சியின் வட்டத் தலைவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் குழுக் கூட்டமொன்றுக்கு பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம், களுத்துறை, கண்டி, நுவரெலியா, அம்பாறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத் தலைவர்கள் குழுவொன்று இந்தச் சந்திப்புக்குத் தயாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தப் பொதுஜன பெரமுனவினர் திட்டம் தீட்டியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්