உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது.இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிலை காரணமாக எரிபொருளின் விலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் இது பொருளாதார மந்த நிலையில் நாடுகளை பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படடுள்ளது.

இந்த போரில் மத்திய கிழக்கு நாடுகள் இரண்டு பக்கங்களாக பிரிந்து நிற்கின்றன. ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் சில நாடுகளும் ஆதரிக்கும் சில நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான நாடுகளாக உள்ளன.

இந்தநிலையில், போரின் எதிரொலியால் விரைவாக எரிபொருள் விலைகள் உயர்வடையும் சாத்தியம் அதிகரித்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், நீண்ட நாள் போருக்குத் தாம் தயார் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அவ்வாறு, போர் தொடருமானால் கச்சா எண்ணெய்யின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றும், அப்படி மாற்றங்கள் ஏற்படுமிடத்து இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் அது தாக்கம் செலுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையில் எரிபொருள் விலையில் அதிகரிப்புச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு அதிகரிப்பு ஏற்படுமானால் இது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை