உள்நாடு

இராணுவ அதிகாரிகள்- சிப்பாய்களுக்கு பதவி உயர்வு.

(UTV | கொழும்பு) –

74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூவின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 12 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 37 லெப்டினன் கேணல்கள், கேணல் நிலைக்கும் 41 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும், 50 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும் 84 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் மற்றும் 83 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினட் நிலைக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின்) அதிகாரிகள் பிரிவில் இவ்வாறு நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

83 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II, அதிகாரவாணையற்ற அதிகாரிகள் -I நிலைக்கும், 183 பணிநிலை சார்ஜன்கள் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் – II நிலைக்கும், 203 சார்ஜன்கள் பணிநிலை சார்ஜன் நிலைக்கும், 414 கோப்ரல்கள் சார்ஜன் நிலைக்கும், 374 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், மற்றும் 248 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

07 பிரிகேடியர்கள் இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றவர்கள் வருமாறு மேஜர் ஜெனரல் டி.எ அமரசேகர யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத் யுஎஸ்பீ, என்டிசி, பீஎஸ்சி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பி.எம் விஜயசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம், மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்பி குலதுங்க ஆர்ஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ ஆகியோர் ஆவர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரவு செலவுத்திட்டம் 2023 [நேரலை]

தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்!

ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்கிறார் – பாதுகாப்புச் செயலாளர்!