உள்நாடு

அபுதாலிப் ஹாஜியார் குடும்பம் 40 வருடங்களின் பின் ” மீண்டும் கிராமத்திற்கு ” சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வு!

(UTV | கொழும்பு) –

அபுதாலிப் சதகா நிறுவனத்தின் அங்கத்தவர்களினால் ஏற்பாட்டில் “மீண்டும் எங்கள் கிராமத்திற்கு” நிகழ்ச்சி 1983ம் ஆண்டு விக்டோரியா நீர் தேக்கத்தை அமைக்க தெல்தெனிய பகுதியில் வசித்த மக்கள் வேறு பகுதிகளுக்கு மீள் குடியேற்றப்பட்டார்கள். அந்த வகையில் அபுதாலிப் ஹாஜியார் அவர்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் மற்றும் வீடுகள் அனைத்தும் இந்த திட்டத்தினால் நீரில் மூழ்கடிக்கப்பட்டன.

தற்சமயம் நீர் மட்டம் மிகவும் குறைவாக காணப்படும் நிலையில் மேற்படி அந்த இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அபுதாலிப் ஹாஜியார் அவர்களின் பிள்ளைகளின் வீடுகள் அமைக்கப்பட்ட இடங்களை அடையாலம் கண்டு அவ்விடங்களில் அதற்கான அடையாளமிடப்பட்ட பதாதைகள் காட்சிபடுத்தப்பட்டு,
கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின்பு அபுதாலிப் ஹாஜியார் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஒன்று திறட்டி இந்த இடங்களுக்கு கூட்டிச் சென்று மீண்டும் எங்கள் கிராமத்திற்கு” என்ற நிகழ்ச்சியை கடந்த 01-10-2023ம் திகதி நடாத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான விசேட விருந்தினராக அபுதாலிப் ஹாஜியார் அவர்களின் ஹயாத்துடன் இருக்கின்ற ஒரே பிள்ளையான ஸியாத் ஹாஜியார் அவர்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். மேலும் சகல உறுப்பினர்களும் அன்றைய காலத்து பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்காரங்களுடனும், பாரம்பரிய உணவு வகைகள் பரிமாரபற்றதுடன் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பாரம்பரிய வினோத நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன. சுமாராக 200 பேர்கள் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வு குடும்பத்தினரின் ஒற்றுமையை சித்தரிப்பதுடன், இன்றைய குடும்ப இளய சமூகத்தினர்களுக்கு 40 வருடங்களுக்கு பின்பு இந்த இடங்களை காண்பதற்க ஒரு சந்தர்ப்பமாக அமைந்ததுடன், நிகழ்ச்சி முடிவில் இரவு சகலரும் ஒருவருக்கொருவர் சலாம் கொடுத்து கண்ணீருடன் விடை பெற்றது கான்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரம் சுவரொட்டிகள் நீக்கம்

editor

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு