உள்நாடு

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!

(UTV | கொழும்பு) –

138 உதவி சுங்க அத்தியட்சகர்கள் மற்றும் 45 சுங்க பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல, கலபிடமட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி ஒக்டோபர் 16 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இந்த பதவிகளுக்காக இணைக்கப்படவுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டம்.

editor

நீர் கட்டணம் அதிகரிக்குமா?

சவூதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு!