(UTV | கொழும்பு) –
ஆஸ்திரியாவில் ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சால்ஸ்பர்கர் வோர்ஸ்டாட் 15 என்ற முகவரியுடன் காணப்படும் கல்லினால் கட்டப்பட்ட அந்த வீடு பழுப்புநிற வர்ணம் பூசப்பட்டு காணப்படுகின்றது. முதல் தளத்தின் ஜன்னல்களை மறித்தவாறு இரும்புக்கம்பிகள் காணப்படுகின்றன ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் காணப்படுகின்றது அதற்கு அருகில் கிரனைட்கல்லினால் கட்டப்பட்ட நினைவுத்தூபி காணப்படுகின்றது –அமைதி சுதந்திரம் ஜனநாயகத்திற்காக மீண்டும் பாசிசம் வேண்டாம் உயிரிழந்தவ மில்;லியன் கணக்கானவர்கள் அதனை நினைவுபடுத்துகின்றனர் என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் இந்த வீட்டிலேயே பிறந்தார்.
பேர்லினின் இல் உள்ள பதுங்குழியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு 78 வருடங்களாகியும் அவர் பிறந்த இடம்குறித்து விவாதங்கள் காணப்படுகின்றன. ஹிட்லர் தனது நாட்டில் தான் பிறந்தார் என்பதிலிருந்து விடுபட ஆஸ்திரியா போராடுகின்றது- நியோநாஜிகளிற்கான வழிபாட்டுத்தலத்தை அகற்ற அது விரும்புகின்றது. இதன் காரணமாக அந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்த நாடு முயல்கின்றது எனினும் அதற்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது. ஹிட்லரின் வீட்டை பொலிஸ்நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தவறான சமிக்ஞையாக அமையும் என தெரிவிக்கின்றார் இயக்குநர் குண்டர் ஸ்வைகர் இது ஹிட்லரால் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைவதற்கு சமம் என்கின்றார் அவர் .
இவர் யார் பிரானோவுக்கு அச்சப்படுகின்றனர் என்ற ஹிட்லரின் பிறப்பிடம் குறித்து நன்கு பிரசித்த பெற்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். பிரானோ ஒரு நாஜிகள் நகரம் இல்லை அதற்கு எதிர்மாறானது என்கின்றார் அவர். ஹிட்லர் இங்கு பிறந்தார் என்பது மக்கள் உண்மையை நேருக்நேர் எதிர்கொள்ள உதவுகின்றது நீங்கள் இந்த நகரை பார்த்து அஞ்சத்தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அந்த பகுதி மக்கள் குழுவொன்றும் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்கும் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பேரழிவு முயற்சியாக அமையும் என தெரிவித்துள்ள என அமைப்பொன்றின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாஜிகாலத்தில் பொலிஸார் கேள்விக்குறிய விடயத்தில் நடந்துகொண்டார்கள் என தெரிவித்துள்ள அவர் இந்த வீட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த வேறு சிறந்த ஆலோசனைகள் திட்டங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் வீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்ற பிரச்சினை 1938 முதல் காணப்படுகின்றது- ஜேர்மனி ஆஸ்திரியாவை தன்னுடன் ஆக்கிரமித்த பின்னர் நாஜி கட்சி தனது ஸ்தாபகரின் பிறந்த இடத்தை கைப்பற்றி அதில் கலாச்சார நிலையமொன்றை ஏற்படுத்தியது.
யுத்தத்தின் பின்னர் அந்த வீடு பழைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் பின்னர் அந்த வீடு ஒரு நூலகமாகவும் பாடசாலையாகவும் மாற்றுத்திறனாளிகளிற்கான அலுலவகமாகவும் காணப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්