உள்நாடு

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படாததால் நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தமும் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் வீடுகளுக்கு

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர்

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை