உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு கூட்டம் தோல்வி – செஹான் சேமசிங்க தலைமையில் குழு.

(UTV | கொழும்பு) –

 

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான 2ஆம் கட்ட கடன் ஒப்பந்தத்தை மையப்படுத்திய மீளாய்வு கலந்துரையாடல்கள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள நிலையில், 2ஆம் கட்ட கடன் தொகையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழுவை வொஷிங்டனுக்கு அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் தூதுக்குழுவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கலந்துரையாடியிருந்தார்.

அரசாங்கத்தின் வருமானம் குறித்து நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் தூதுக்குழு அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அரசாங்கத்தின் வருமானம் தொடர்ந்து கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற நிலையில், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது கடினம்.
எனவே, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்துமாறு நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு அரசாங்கத்தை வலியுறுத்தியது.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் வரவு – செலவு திட்டத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்திய போதிலும், அதனை முழுமையாக ஏற்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மறுத்துள்ளதுடன், வருமான வரியை மேலும் அதிகரிப்பதற்கான யோசனையை நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது முன்வைத்துள்ளனர்.

ஆனால், இந்த யோசனையை ஜனாதிபதியும் கலந்துரையடலில் கலந்துகொண்ட அரச தரப்பும் ஏற்க மறுத்தனர். எனவே, எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை அழைத்து விசேட கலந்துரையாடலை மறுநாள் முன்னெடுத்த ஜனாதிபதி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான விசேட குழுவை இவ்வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன் பிரகாரம், வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள சர்தேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்துக்கு இலங்கையின் விசேட குழு சென்று 2ஆம் கட்ட ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இது

கிளப் வசந்த கொலைக்கு உதவிய அரசியல்வாதி கைது.

editor

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து