உள்நாடு

நான் நலமாக இருக்கிறேன் – மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து.

(UTV | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திடீரென சுகயீனமுற்ற நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இந்த நிலையிலேயே தான் நலமாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களனி ராஜமஹா விகாரையில் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எனது உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் (ஊடகவியலாளர்கள்) பார்க்க முடியும். சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விஷயங்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்த வேண்டியதில்லை. மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக நீண்ட காலம் பதவியில் இருப்பதற்கு எதிர்பார்க்கவில்லை. தற்போதைய இளம் தலைவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதன்போது, களனி விகாரைக்கு வருகை தந்த பொதுமக்களையும் முன்னாள் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

வெளிவிவகார அமைச்சகத்தின் அறிவிப்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன்