உள்நாடு

குளிரூட்டியிலிருந்து வெளியேறிய புகையால் இருவர் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

குளிரூட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஏகாம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா. அவரது மகள் நஸ்ரிபேகம். அவர்கள் இருவரும் நேற்று இரவு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அந்த அறையில் இருந்த குளிரூட்டியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளிரூட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்