உள்நாடு

ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை பிரஜைகளை காண்பிக்கும் வீடியோக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
கட்டணம் செலுத்தி பார்க்கும் ஆபாச தளங்களில் காணப்படும் வீடியோக்களிலும் ஆபாச வீடியோக்களிலும் சமீப காலங்களில் இலங்கையர்கள் அதிகளவு காணப்படுகின்றனர். சில வீடியோக்களில் இலங்கையை சேர்ந்த ஆபாச பட நடிகைகள் நடித்திருக்கலாம். ஏனைய வீடியோக்கள் குறிப்பிட்ட நபர் அறியாமல் மூன்றாம் தரப்பால் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

இலங்கை பெண்களை அடிப்படையாக கொண்ட ஆபாச பட இணையத்தளங்கள் இலங்கையில் செயற்படுகின்றன எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட வீடியோக்களில் காணப்படுபவரின் சம்மதம் இன்றி அவை பதிவு செய்யப்பட்டு மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் வெளியாகியுள்ளது. சர்வதேச இணையத்தளங்களுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பப்படுவதற்கு பழிவாங்குவதும் ஒரு காரணம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் ஆபாச வீடியோக்கள், படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய வருவதில்லை.

தங்களின் கௌரவம் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் இதற்கு காரணம் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிருப்தியில் ஐ.நாவின் மனித உரிமைகளின் அமைப்பின் இயக்குனர் இராஜினாமா!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

அருவக்காடு கழிவகற்றல் நிலைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை