உள்நாடு

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பெண்!

(UTV | கொழும்பு) –

இலங்கை சுற்றுலா அதிகார சபையில் முகாமையாளர் தரத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிங்கள மொழியில் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவின் இது சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தினை எதிரொலித்துள்ளதுடன் ஏனையவர்களை அச்சுறுத்தும் விதத்தில் இது அவருக்கான மற்றுமொரு பாடம் இது நாடகம் ஆடுபவர்களிற்கான மற்றுமொரு பாடம் – கற்றுக்கொள்ளப்பட்டுள்ள பாடம் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட் பெண் தனது சமூக ஊடக பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் அவர் தப்பியோடிவிட்டார்- அவர் தான் சர்ச்சைக்குரிய பக்கச்சார்பான தீர்ப்பை வழங்கிய பின்னர் அச்சமடைந்துள்ளார். தேசத்தின் அப்பாவித்தனத்தை பாரம்பரியத்தை தாக்கியதன் விளைவுகளை நீங்கள் அனுபவிக்கவேண்டும் என அவரது மனச்சாட்சி அவருக்கு தெரிவித்திருக்கவேண்டும். குருந்தூர் மலைக்கான பௌத்தர்களின் உரிமையை அவதூறு செய்த பௌத்தர்களை வேதனைப்படுத்திய முல்லைத்தீவு நீதவான் பதவி விலகியுள்ளார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குருந்தூர் மலை காரணமாக தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவிடமிருந்தும் பௌத்த மதகுருமாரிடமிருந்தும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் அகதியாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.அவரது நாடகம் அவர் அகதியாகியுள்ளதுடன் முடிவடைந்துள்ளது. சாலியபீரிசின் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணீருடன் விமானநிலையம் வரை அவருக்கு பாதுகாப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் எங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ள பாடம் என்னவென்றால் பொய்களிற்கு உயிரில்லைஇது சிங்கள பௌத்தநாடு இது அவர் கற்றுக்கொண்ட மற்றைய பாடம்.நாடகங்கள் நடிப்பவர்களிற்கு பாடங்கள் உள்ளன – கற்றுக்கொண்ட பாடம் என பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அந்த பெண் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் மூல வாக்களிப்பு – 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

சீனவுக்கு குரங்குகள் கொடுக்க இணக்கம்