(UTV | கொழும்பு) –
கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி வைபவம் பள்ளிவாசலின் இனைத் தலைவர் முஸ்லிம் சலாஹூடீன் தலைமையல் நேற்று 28.09.2023 ல் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ்குணவர்த்தன கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாழும் மூவின வறிய 3000 குடும்பங்களுக்கு தலா 3000 ருபா பெறுமதியான 3000 உணவுப்பார்சர்கள் பகிர்ந்தளிக்க்ப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவா்களுக்கு பிரதம மந்திரி தினேஸ்குணவர்த்தனவினால் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு பிரதம மந்திரி உரையாற்றுகையில் .. இன்றைய தினம் நபி முஹம்மத் ஸல்லாஹூ அலைவசல்லம்
அவர்கள் பிறந்த தினத்தில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் வைபவத்தில் கலந்து கொண்டமை பெரிதும் பாக்கியமாக கருதுகின்றேன். இப்பள்ளிவாசல் முன்னால் தலைவர் காலம் சென்ற கலீல் ஹாஜியார் . இப் பள்ளிவாசலின் சொத்து பிரச்சினை சம்பந்தமாக என்னை அடிக்கடி சந்தித்து உரையாடியுள்ளார். அப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முயற்சிப்பதாகவும் பிரதமர் கூறினார். பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் பௌசி , யட்மின் குணவர்த்தன (பா.உ) அர்ஹம் உவைஸ், முன்னாள் மலேசியா நாட்டுத் துாதுவர் அன்சார் இப்ராஹிமும் மற்றும் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் நிர்வாக சபை உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්