(UTV | கொழும்பு) –
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்கள் செலுத்திய நிலையில் எரிபொருள்,எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 2022 ஏப்ரல் மாதமளவில் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அரசாங்கம் அறிவித்தது. கடந்த ஒன்றரை வருட காலமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்தாமல் அந்த நிதியை கொண்டே எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு கடன்களை தொடர்ந்து செலுத்தாமல் இருக்க முடியாது.
கடன் பெறுவதையே பிரதான பொருளாதார கொள்கையாக அரசாங்கம் கருதுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தற்போது தோல்வியடைந்துள்ளது. கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இரண்டாம் தவணை கடன் வழங்கல் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது. அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளடக்கிய சகல தகவல்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் அரச நிர்வாகத்தில் நிலவும் ஊழலை பகுதியளவேனும் குறைத்துக் கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්