உலகம்

பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 50 பேர் பலி.

(UTV | கொழும்பு) –

பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்தில் பலூசிஸ்தானின் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில், இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 50 போ் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். மஸ்துங் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அந்நாட்டின் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி இந்த குண்டுவெடிப்பு “மிகவும் கொடூரமான செயல்” என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நான்காவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்

கோமாவில் இருந்து மீண்டார் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர்

ஆப்கானில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி.